Search This Blog

Loading...

Friday, 4 May 2012

Sekara-வின் நிழல் நினைவுகள்

தனிமையான சில தருணங்களில் 
இதயத்தின் உள்ளே ஆழமான வெறுமை 
 தாங்க முடியாததாய்..

முழுநினைவும் நீயாய் இருக்க 
சுயநினைவே இல்லாமல்
வெயில்பட்ட பனித்துளியாய் 
தவித்துதான் போகிறேன்..

கனவுகளை தேடி      
உறங்க துடித்த எனது விழிகள்
இன்று வலிகளை சுமக்கிறது.. 

உன்னை நினைக்கும்
ஒரு வினாடியில் என் உயிரின்
அனைத்து துடிப்பையும்
செயலிழக்க செய்கிறாய்.. 

உன் கண்களில் என்னை பார்த்து 
தலை கோதிகொண்ட காலங்கள்
ஏன்?? எதற்காக??

 என் உயிரில் வாழ்ந்துவிட்டு
என் உலகையே இருட்டாக்கி
சென்று விட்டாய்!!..

காதல் தோல்விக்கு பின்
தனிமையில் நடந்தேன்..
தொடர்ந்து வந்தது நிழல் என்று நினைத்தேன்
இல்லை என்னவளின் நினைவுகள்!!..

Sekara-வின் அழும் கவிதைகள்

 
நான் உன்னை கனவுகளிலும் 
நீ என்னை நினைவுகளிலும் 
தேடிக்கொண்டிருப்பதால் நம்மை 
இணைக்க முடியாமல் காதல் 
தடுமாறுகிறது..

பிரிந்து விடுவோம் என 
பிரிந்து விட்டோம்..  ஆனால்
விட்டுவிடத்தான் முடியவில்லை!!.. 

ஒருவிழியில் நீயும், 
மறுவிழியில் நினைவும்
 இன்றும் வழிந்தோடுகிறது..

Friday, 3 February 2012

Sekara-வின் கவிதைகளின் கரை


என் கவிதை அருவிகளுக்கு

இருபுறமும் கரையாய் இருப்பது

உன் நினைவுகள் மட்டுமே..


நீ தந்த நினைவுகளை 

தாண்டமுடியாமல் இன்னும் 

தடுமாறிக் கொண்டிருக்கிறேன்!!.. 

Monday, 23 January 2012

Sekara-வின் "பைத்தியக்காரன்"


காவல் நிலையம் சென்று 

காணவில்லை என்னை 

என்றேன்..


கையாலாகாத காவல்துறை 

என்னை "பைத்தியக்காரன்" 

என்கிறது...

Friday, 20 January 2012

Sekara-வின் வெட்கப்பட்டாள்



என்னவளே..
உனக்கு நினைவிருக்கிறதா
அந்த அழகான இளமாலை
நீயும், நானும் நாமாக பேசிய நேரம்

எப்போது என்னை முதன்முதலாக 
காதலிக்க ஆரம்பித்தாய்??..
என்று கேட்டாய்.. நீ

வாசலில் போடப்பட்டிருந்த
ஒரு கோலத்தை உன்னிடம் காட்டி..
எப்படி இருக்கு??.. என்றேன்

"ரொம்ப அழகா இருக்குடா" என்றாய்

இந்த கோலம் எந்த புள்ளியில்
ஆரம்பிக்கப்பட்டது?? என்று கேட்டேன்..

அது எப்படிடா தெரியும்??? என்றாய்  

உன்மீதான என் காதலும்
அதுபோலதான்டி என்றேன்...

பதிலுக்கு வெட்கப்பட்டாய்..
இளமாலையையும்
கோலத்தையும்விட மிகஅழகாய்..

Tuesday, 3 January 2012

Sekara-வின் உயிரின் விலை

என்
உயிரும் கூட
விலை மதிப்பின்றி
போய்விட்டது..


அவள்

எனக்காக

சிந்திய ஒருதுளி

கண்ணீருக்கு முன்னால்!!..