உள்ளங்கை ரேகைக்கு
உட்பட்டதா நம் வாழ்க்கை -- இல்லையில்லை!!!...
இலையோடு இலை இருந்தாலும்
பிரிவென்பது எழுதப்படாத கட்டாயம்!!!...
கல்லூரி காலங்கள் முடிந்து
உன்னை வழியனுப்பிய நாள் அது..
May-01-2005, மதியம் 01 : 30 மணி
இடம்: திருச்சி ரயில் நிலையம்
தொடர் வண்டியில்...
"போய் வருகிறேன்"... என்று நீயும்
"போய் வா" என்று நானும்
சொல்லிய அந்த விருப்பமில்லா தருணங்களில்
வண்டி நகர்ந்ததே.. என் இதயத்தை கிழித்து கொண்டு!!!...
அந்த கொடூர நிமிடங்களின் வலியை
நான் மறக்க நினைக்கிறன்....

0 Comments:
Post a Comment