உன்னை விட்டு விட நினைத்தாலும்
விரல் பிடித்து கூடவே வருகிறதே
விரல் பிடித்து கூடவே வருகிறதே
நீ வளர்த்திட்ட நம் ஞாபகங்கள்!!!..
ஒருநாள் "ஒருநாளைக்கு எத்தனை முறை என்னை நினைக்கிறாய்?"
என்று கேட்ட உன்னிடம்..
உன்னை நினைக்கும் போதெல்லாம்
விண்மீன் ஒன்று படைக்க
கடவுளிடம் கூறியுள்ளேன்...
இன்றிரவு வானத்தை பார்.. புரியும்..
என்று நான் சொன்னதும்..
ஐயோ முருகா!!!... இதற்கும் கவிதையா???But நல்லா இருக்கு... என்றாயே..
அது என்கவிதையை
ஒரு கவிதையே ரசித்த நாள்!!!..