Search This Blog

Loading...

Monday, 14 February 2011

தனித்து வாழ்கிறேன்

தனிமையில்  இனிமை கண்டவன்
உன்னைப்பார்த்த பின்பு தனிமை பிடிக்காமல்..

கொட்டும் மழையில் நனைந்து வந்த உன்னிடம் 
என் காதலை சொன்ன போது...
கொஞ்சமும் ஈரம் இல்லாமல் முடியாது... என்றாயே!!!... 

உன் மணவோலை 
பார்த்த பின்புதான் புரிந்தது எனக்கு..
"உனக்குள்ளும் காதல் இருக்கிறது" என்று... 

மீண்டும் தயாராகிக் கொண்டிருக்கிறேன்..
உன் நினைவுகளுடன் தனித்து வாழும்
என் வாழ்நாட்களுக்காக!!!.. 

0 Comments:

Post a Comment