சாபக்கேடுகளாய் போன கதை!!..
அன்று என்னுள் தாக்கத்தை விதைத்துவிட்டு
இன்று என் தூக்கத்தை எடுத்துக்கொண்டாள்!!..
எனக்கு மட்டும் விதிவிலக்கு!!..
ஆம், நான்காண்டு கல்லூரி வாழ்க்கையில்
உன் ஒவ்வொரு சிரிப்பிலும், பிரிவிலும்
உயிரிழந்து பிறந்தவன்!!!
என் கண்களில் கண்ணீர் துளிகள்..
கண்களின் கரையோரம் உன் நினைவுகள்
கொஞ்சம் மென்மை கூடியவைகளாய்..
அந்த மென்மையின் தன்மையோ
உந்தன் பெண்மையால் வந்தவையாய்!!..
கண்ணீர் மட்டும் வரவில்லையடி!!!..உன்னை நினைக்கும் போதெல்லாம்
ஓயாமல் உயிர் பிரிகிறதடி!!!..
ஆனால் ஒரே ஒரு முறை
உன் மடியில் என் உயிரை விட வேண்டும்!!!..நான் இறந்தாலும் என் இதயத்தை தானம்
செய்துவிட்டு செல்லஆசை!!..
உன் நினைவுகளுடன் இன்னொரு வாழ்வு
வாழ வாய்ப்பு கிடைக்குமே என்று!!...

0 Comments:
Post a Comment