Search This Blog

Loading...

Saturday, 25 June 2011

காதல் என்றாலே கண்ணீரா?

நான் கண்ட கனவுகள் கூட 
கண்ணாடி பிம்பங்கள்தானோ
உடைந்து உருக்குலைந்து விட்டதே??..

வலி இல்லாத என் இதயத்தில் 
விழி கொண்டு நுழைந்த அவளுக்காக 
பலியாய் காத்து கிடக்கிறேன்.. தனியாய்..

என் துன்பத்தில் அன்பெடுத்து மகிழ்ந்தாயே??..
உன்னைப் பிரிந்தபோது மறக்கலாம்.. என நினைத்தேன்
மறப்பதைவிட மரணிப்பதே மேல் என்று
மென்மேலும் உணர்த்துகிறது உன் ஞாபகங்கள்..  

அடிப்பாவி, ஒரு அப்பாவியை அழ விட்டாயே??..
காதல் என்றாலே கண்ணீரா??..
இப்படி குற்றுயிராய் விடுவதிற்கு பதிலாய் 
ஒரு கருணைக்கொலை செய்திருக்கலாம்..

0 Comments:

Post a Comment