Search This Blog

Loading...

Saturday, 25 June 2011

புனித பூமியில் போலி உறவுகள்

நீ வாழ நானும்.. நான் வாழ நீயும்..
மாறி.. மாறி.. வாழ்த்திக் கொண்டோம்..

நீ என்னை பிரிந்து விட்டால் 
நான் உன்னை மறந்து விடுவேன் 
நம் காதல் தானாக இறந்துவிடும்..  என நினைத்தேன்..

ஆனால் இன்றோ..
என்னைக் கொள்ளை கொண்டவளின் நினைவுகளுக்கு 
கொல்லியிட முடியாமல் குமுறுகிறேன்..
உன்னை மறக்க முடியாமல் 
மரண தண்டனை அனுபவிக்கிறேன்..

மரணம்... ஒரு நொடி வலி 
உன் பிரிவு... ஒரு யுக வலி 

இப்படியாக.. வேதனைகளில் வாழ்க்கை..
உன் நினைவுகளில் கவிதை..
ஏய்!!.. காதலே.. உன் உருவகம்தான் என்ன??

உனக்கு தெரியுமா??..
நமது நினைவுகளுக்கு இன்று வெள்ளைச்சேலை 
உடுத்தி விட்டேன்!!.. ஆமாம்..
நாம் "புனித பூமியில் போலி உறவுகள்"

0 Comments:

Post a Comment