Search This Blog

Loading...

Saturday, 23 July 2011

Sekara-வின் "ஏதோ தோனுச்சு"

ஒரு முறை பேனா ஒன்றை
உன்னிடம் கொடுத்து எழுதி பார்.. என்றேன்

உன் பெயரை எழுதினாய்..
கையெழுத்து அழகாய் இருந்தது..

உன் கைபட்ட பேனாவோ அதைவிட அழகாய்..

******************************************************

உன் வீட்டு பூச்செடிகள் கூட
உன் கைபட்ட பின்புதான்
பூப்படைகிறதாமே???...

******************************************************

உன்னை கடித்த அந்த எறும்புக்கு
சக்கரை வியாதியாமே !!!..

அடிப்பாவி... உன் கைபட்ட
எனக்கும் சக்கரை வியாதியாம்!!..

******************************************************

உன் முகம் கண்டபின்பு
முழுநிலவை முழுசாய்
ரசிக்க முடியவில்லை!!...

******************************************************

நீ அழகு தேவதையாய் இருந்தும்
முத்தம் என்றதும்
ஏன் கஞ்சப்படுகிறாய்!!..

******************************************************

காதலை வெறுப்போரே
என்னவளை பாருங்கள்..
"காதல்" என்ற வார்த்தை கூட பிடிக்கும்!!..

******************************************************

நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்..
என்னைபோல எத்தனை பேர்
கண்ணீரில் குளித்தாயோ??...

அடிப்போடி!!...
இதெல்லாம் ஏதோ தோனுச்சு
அதான் எழுதினேன்..
By... Sekara

2 Comments:

  1. உண்மையில் மொத்தமும் அழகாய் இருக்கிறது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete