Search This Blog

Loading...

Saturday, 16 July 2011

Sekara-வின் "நான் ஒரு மொழி பெயர்ப்பாளன்"

பக்கம் பக்கமாய் பேசி பார்த்து
தயாராகி வருவேன்..
உன்னுடன் பேச வேண்டும் என்பதற்காக..

உன் எதிரில் வந்ததும்
வினாத்தாளை பார்த்த
மாணவனைப்போல் விழிப்பேன்!!..

உன் முண்ட கண்கள் முன்னால்
என் மூளை நரம்புகள் முடக்கப்படுவது
இயற்கைதானே??...

கோனார் தமிழ் உரை போல்
ஒரு வழிகாட்டி இருந்திருந்தால் எனக்கு 
அது ஒளிகாட்டியாய் இருந்திருக்கும்... 

கவிதைகள்...
நிச்சயமாய் எனக்கு வராது..
அது நீ எனக்கு கற்று தந்த பாடம்..

ஆமாம்.. 
உன் மௌனங்களை மொழி பெயர்த்தேன்..
என்னை "கவிஞன்" என்கிறார்கள்..

உண்மையில் நானொரு மொழி பெயர்ப்பாளன்
என்பது உனக்கும், எனக்கும் மட்டுமே
தெரிந்த உண்மை!!..  

0 Comments:

Post a Comment