Search This Blog

Loading...

Friday, 30 December 2011

Sekara-வின் "உயிர் வலிக்க காதலிக்கிறேன்"


யாருமே இல்லாத வெட்ட வெளியிலும் 
கை கோர்த்துக்கொண்டு நடந்தோம்..

நமக்கென  வரையறுக்கப்பட்ட
அந்த கல்லூரி சாலையில்
நீ இல்லாத இரவுகளை நானும் 
நான் இல்லாத பொழுதுகளை நீயும்.. 

பேசுவதற்கு ஆகாயம் அளவிருந்தும் 
பிரிவையே பெரிதாய் பேசினோம்..

latest கவிதை??.. என்ற உன்னிடம்
"காதலையும், அதை படைத்த கடவுளையும் 
இந்த நொடிகளில் உணர்கிறேன்" என்றேன்..

 அடப்பாவி!!..
"நெசமாவே என்ன பத்திதான் சொல்லுறியா??" 
என்று கேட்ட உன்னிடம்..

 உன்னை 
"உயிர் வலிக்க காதலிக்கிறேன்" என்று 
எப்படி வெறும் வாயால் சொல்வது!!..

0 Comments:

Post a Comment