அன்று எழுதி அனுப்பிய கவிதைகளெல்லாம்
என்னை பார்த்து சிரித்தது..
இன்று எழுதுகிற கவிதைகளோ
என்னை பார்த்து அழுகிறது..
அழுகிற கவிதைகள்
அழகாய் இருப்பதாய் சொல்கிறார்கள்
அழுகின்ற கவிதைகள் அழகென்றால்
அழவைத்த நீ "பேரழகு"
அன்றைய சுகம் காதல் கவிதைகளில்
இன்றைய சோகம் காயக்கவிதைகளில்
கண் நெறைய கண்ணீர்
கைகுட்டையில் ஒற்றி எடுக்க
கொஞ்சமும் ஒட்டவேயில்லை..
கண்(நீ)ர் துளிகளில்
நீ(ர்) நிறைந்திருக்க
இஷ்டமில்லை விட்டுக்கொடுக்க!!..

0 Comments:
Post a Comment