பின்னாளில் சேர்ந்து படிக்கலாம் என்று
பத்திரப்படுத்திய "Slam Book"யை
புரட்டுகிறேன் தனிமையில்..
வழக்கமான வார்த்தைகளையும்
வாழ்த்து கவிதைகளையும் தாண்டி
புத்தகமெங்கும் புரையோடி இருக்கிறது
நம் காதல் நினைவுகள்..
நம் பொருத்தத்தை பாராட்டும் தோழன்..
அடுத்த சந்திப்பிற்கு சந்தர்ப்பமாய்
நம் திருமணம் அமையுமென நம்பிய கனவுகள்..
அதற்கு வரமுடியுமோ என்ற சந்தேகத்தில்
அப்போதே வாழ்த்து சொன்ன அன்பு நெஞ்சங்கள்..
இதயம் துடிதுடிக்க நெஞ்சம் கணக்கிறது!!..
கண்ணசைவுகளில் காதல் வளர்த்தவளே
உணர்வுகளை நீ எப்போதும் உரக்க சொன்னதில்லை
பிரியத்தின் போதும்.. பிரியும் போதும்..
சொல்லியிருந்தால்
அன்றே கண்காணாமல் போயிருப்பேன்..
அன்றே கண்காணாமல் போயிருப்பேன்..
0 Comments:
Post a Comment