நீ எதார்த்தமாய் செய்யும்
ஒவ்வொரு செயல்களிலும்
ஒருநிமிடம் உருக்குலைந்தவன்..
உனது தும்பல் நிகழ்ச்சியில்
துகில் தூரம் கலைந்தவன்
உனது சோம்பல் முறிப்பு நிமிடங்களில்
உணர்வுகள் முருக்கேற்றியவன்
நீ வெட்கும் போதும், விக்கும் போதும்
நிலைதடுமாறி தலை குனிந்தவன்
நீ குளிக்கும்போது குளிர் காய்ந்தவன்
சிரிக்கும்போது சிலிர்த்து கொண்டவன்
அழுகும்போதும் உன் அழகை ரசித்தவன்
உன் கூந்தல் வாசனையில்தான்
மலர்களின் மணம் பிடித்தவன்..
உன் கண்ணக் குழிகளில்
பிரம்மனின் கலைநயம் கண்டவன்..
உன் கண்ணசைவுகளில்
கைதியாய் கட்டுப்பட்டவன்..
உன் மௌனங்களில் முட்டிமோதியே
முலி பெயர்ந்தவன்..
உனது சிற்சிறு அசைவுகளில்
நாணலின் நளினம் அறிந்தவன்
உன்னை பக்கத்தில் பார்த்தபோதெல்லாம்
மூச்சு திணறித்தான் போனவன்..
உன்னை பக்கத்தில் பார்த்தபோதெல்லாம்
மூச்சு திணறித்தான் போனவன்..
நீ வெட்டிபோட்ட நகங்கள் கூட
எனக்கு கவிதை படிப்பித்தது!!..
உதிர்த்த உன் கூந்தல் இலைகள்
உயிரில் இழையோடியது..
இப்படியாக ஒரு மலரை ரசித்தவன்
இன்று முட்களை சுவாசிக்கிறேன்
இன்று முட்களை சுவாசிக்கிறேன்
ஆமாம்... இன்றைய இயந்திர உலகம்
எனக்கு இயங்க மறுக்கிறது!!..


0 Comments:
Post a Comment