வருடங்கள் பல கழித்து
இருவரும் சந்தித்தோம்
இமைக்க முடியவில்லை
அரை நிமிட பார்வைதான்
நாலுவருட கல்லூரி வாழ்க்கை
நிழலாடியது நிற்காமல்..
கண்களை இமைத்தோம்
கொட்டியது கண்ணீர்!!..
மீதி அரை நிமிடத்தில்
மௌனம் கொண்டோம்..
பின்பு.. நான்தான் ஆரம்பித்தேன்
எப்படி இருக்க?? Husband எப்படி இருக்கார்??
அம்மா... குழந்தை... இப்படியாக
ஒரு உற்சாகமான விசாரிப்புகள்..
தலையாட்டலும், மௌனங்களும்
பெரும்பாலும் பதிலாக கிடைக்க..
சரி பார்க்கலாம்!!.. என்றாள்
நான் மௌனித்து கொண்டேன்..
நான் மௌனித்து கொண்டேன்..
நான்கடி நடந்திருப்பாள்.. திரும்பி
நீ எப்படிடா இருக்க?.. என்றாள்
உணர்வுபூர்வமாக கேட்டிருப்பாள் போல
உண்மையில் உடைந்து விட்டேன்!!..
0 Comments:
Post a Comment