அவளின்
ஒரு விழியில் விடியலையும்
மறு விழியில் காமப்படையலையும்
கண்டுநான் காணாமல் போய்கொண்டிருந்த
காலங்கள் அது..
ஒருசேர கனவு கண்டோம்.. ஆனால்
ஒன்று சேரத்தான் முடியவில்லை
அனைவரிடமும் நட்பு கொண்டேன்
உன்னிடம் மட்டுமே காதல் கொண்டேன்
இறுகிய மனதை இளக வைத்தாய்
இளகிய மனதை ஏங்கவும் வைத்தாய்..
இப்படி
எத்தனை கவிதைகள் எழுதியிருப்பேன்
உன்னை விடுத்து ஒன்றுகூட இல்லையே..
திருவிழாவில் திருடுபோனவன்போல்..
திருடுபோனது திருவிழா என்றாலும்
தேடிக்கொண்டிருப்பது தெருவீதியில்..
தொலைத்தது கிடைக்காவிடினும்
களவு கொண்டவளை யேனும்
கண்டு விட காத்திருக்கிறேன்..
ஒரு விழியில் விடியலையும்
மறு விழியில் காமப்படையலையும்
கண்டுநான் காணாமல் போய்கொண்டிருந்த
காலங்கள் அது..
ஒருசேர கனவு கண்டோம்.. ஆனால்
ஒன்று சேரத்தான் முடியவில்லை
அனைவரிடமும் நட்பு கொண்டேன்
உன்னிடம் மட்டுமே காதல் கொண்டேன்
இறுகிய மனதை இளக வைத்தாய்
இளகிய மனதை ஏங்கவும் வைத்தாய்..
இப்படி
எத்தனை கவிதைகள் எழுதியிருப்பேன்
உன்னை விடுத்து ஒன்றுகூட இல்லையே..
திருவிழாவில் திருடுபோனவன்போல்..
திருடுபோனது திருவிழா என்றாலும்
தேடிக்கொண்டிருப்பது தெருவீதியில்..
தொலைத்தது கிடைக்காவிடினும்
களவு கொண்டவளை யேனும்
கண்டு விட காத்திருக்கிறேன்..

Eththanaiyo... aththanaiyum super...
ReplyDelete