விதையாய் புதைந்து கிடந்தேன்..
பருவமழை போல வந்தாள்
என் பருவ வயதில்
அவள் பரிச்சியமானாள்
காதலோ விருச்சகமாகியது..
பருவகாலங்களில் பயின்று பெற்றதைவிட
பருவமாற்றம் பயிற்றுவித்தது பலபல..
தாயின் கருவறையில் இருந்த சுகத்தை
அவளின் கருவிழியில் கண்டேன்.
கடைக்கண் பார்வை என்றாலும்
அதிலே கருகி காணாமல் போனேன்..
அர்த்தமில்லா வாழ்வை அர்த்தமாக்க
அவளை நோக்கி ஓடினேன்..
நொடிப்பொழுதே பூவில் அமர்ந்து செல்லும்
வண்ணத்துபூச்சி போல
ஓடிவிட்டால் என்னை விட்டு!!..
பாதங்களை கொஞ்சம் ஆழப்பதித்து
சென்று விட்டாள் போல
இதயம் இன்னும் வலித்துக் கொண்டிருக்கிறது..
அர்த்தமில்லா வாழ்வை அர்த்தமாக்க
அவளை நோக்கி ஓடினேன்..
நொடிப்பொழுதே பூவில் அமர்ந்து செல்லும்
வண்ணத்துபூச்சி போல
ஓடிவிட்டால் என்னை விட்டு!!..
பாதங்களை கொஞ்சம் ஆழப்பதித்து
சென்று விட்டாள் போல
இதயம் இன்னும் வலித்துக் கொண்டிருக்கிறது..

0 Comments:
Post a Comment