என்னவளே..
உனக்கு நினைவிருக்கிறதா
அந்த அழகான இளமாலை
நீயும், நானும் நாமாக பேசிய நேரம்
எப்போது என்னை முதன்முதலாக
காதலிக்க ஆரம்பித்தாய்??..
என்று கேட்டாய்.. நீ
வாசலில் போடப்பட்டிருந்த
ஒரு கோலத்தை உன்னிடம் காட்டி..
எப்படி இருக்கு??.. என்றேன்
"ரொம்ப அழகா இருக்குடா" என்றாய்
இந்த கோலம் எந்த புள்ளியில்
ஆரம்பிக்கப்பட்டது?? என்று கேட்டேன்..
அது எப்படிடா தெரியும்??? என்றாய்
உன்மீதான என் காதலும்
அதுபோலதான்டி என்றேன்...
பதிலுக்கு வெட்கப்பட்டாய்..
இளமாலையையும்
கோலத்தையும்விட மிகஅழகாய்..
இளமாலையையும்
கோலத்தையும்விட மிகஅழகாய்..

0 Comments:
Post a Comment